'மனைவி கடைக்கு சென்ற நேரம் பார்த்து...' 'பாலியல் சீண்டல் செய்த சித்தப்பா...' அதிர்ச்சியூட்டும் பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோர் இல்லாத தன் சொந்தக்கார பெண் குழந்தையை வீட்டிற்கு வந்த சமயம் சித்தப்பா பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒரு விபத்தில் தன் அம்மாவை இழந்துள்ளார். மேலும் தந்தையும் மகளை சரிவர கவனிக்காமல் அவருடைய வாழ்க்கையை தேடி சென்றுள்ளார்.
தன் அக்காவின் மகள் கஷ்டப்படுவதை பார்த்த அப்பெண்ணின் சித்தி அவரை தன் பராமரிப்பில் எடுத்து வளர்த்து வந்தார். பெண்ணின் சித்தி மாணவியின் படிப்பு பாதியில் நிற்கக்கூடாது என நினைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கல்வியை தொடர செய்துள்ளார். பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவிக்கு திடீரென காது வலி வரவே நேற்று முன் தினம் தன் சித்தி வீட்டிற்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
மாணவியின் சித்தி கடைக்கு சென்றிருந்த நேரம் தன் வக்கிர புத்தியில் மாணவியை பாலியல் சீண்டுதலுக்கு உட்படுத்தியுள்ளார் அவருடைய சித்தப்பா. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் குடியிருப்போர் வீட்டினை முற்றுகையிடவே பயந்து போன சித்தப்பா அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். சில மக்கள் அவரை துரத்தி சென்றும் பிடிக்க முடியாமல் போனது.
மாணவி சிறிதும் தாமதப்படுத்தாமல் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவருடைய சித்தப்பா போலீசாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
