VIDEO: 'மாயமாகி' 1 ஆண்டுக்குப்பின்... மீண்டுவந்த 'பேய்க்கப்பல்'... யாரும் கிட்ட போகாதீங்க... கடும் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Feb 19, 2020 01:26 AM

அயர்லாந்தில் மாயமாகி 1 வருடம் கழித்து கரை ஒதுங்கி இருக்கும் கப்பல் அருகில் யாரும் போக வேண்டாம் என, கடற்படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Ghost Ship landed in Ireland Beach, People Scared

அயர்லாந்து நாட்டின் கார்க் கடற்பகுதியில் மர்மக்கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கடற்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பி அந்த கப்பலில் யாரும் இருக்கிறார்களா? என்று பார்த்தனர். ஆனால் கப்பலுக்கு சென்றுவந்த அதிகாரிகள் அது மர்மக்கப்பல் என தெரிவித்து இருக்கின்றனர்.

கடந்த 2018-ம் அட்லாண்டிக் கடலில் 10 கடற்படை வீரர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்த இந்தக் கப்பல் பெர்முடாவிலிருந்து சுமார் 1,380 மைல்கள் தொலைவில் பழுதாகி நின்றது. அமெரிக்க கடற்படை வீரர்கள் அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து கப்பலின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கப்பலை கரைக்கு கொண்டுவர உதவுவதாக கூறி ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அதற்குள் இந்த கப்பல் கயானா என்னும் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்குப்பின் இந்த கப்பல் குறித்த எந்தவொரு தகவலும் கடந்த ஓராண்டாக இல்லை. ஆனால் அவ்வப்போது ஆப்பிரிக்க கடலை கடந்து விட்டது, நடுக்கடலில் நின்று கொண்டிருக்கிறது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் தற்போது அயர்லாந்து கடற்பகுதி ஓரம் இந்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளது.

மர்மக் கப்பல் கரை ஒதுங்கியது தொடர்பாக கார்க் நகர மக்களுக்கு அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ''சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கப்பலிடமிருந்து விலகி இருங்கள். ஏனெனில், ஆபத்தான மற்றும் நெருங்க முடியாத சூழலில் நிலையற்ற தன்மையில் அந்த கப்பல் உள்ளது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கப்பல் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்துள்ளனர். இந்தக் கப்பலால் எந்தவித மாசுபாடும் இப்போது ஏற்படாது" என்று தெரிவித்துள்ளனர்.

ஓராண்டுகளுக்கும் மேலாக காணாமல் போனதால் மக்கள் இந்த கப்பலை பேய்க்கப்பல் என்று அழைக்க ஆரம்பித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TWITTER