நோயாளியின் வயிற்றில் '116 இரும்பு ஆணிகள்.. இன்னும் லிஸ்ட் இருக்கு'.. ஷாக் ஆன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 15, 2019 11:45 PM

ராஜஸ்தானைச் சேர்ந்த 42 வயது நபரின் வயிற்றுப்பகுதியில் இருந்து 116 ஆணிகளை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

doctors removes 116 iron nails, pellets, wires from rajasthan patient

ராஜஸ்தான் மாநிலத்தின் பூண்டி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான போலோ சங்கருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். ஆனாலும் அவரின் வயிற்று வலி நின்றபாடில்லை.

மிகவும் சிரமத்துக்குள்ளான போலோ சங்கரின் வயிற்றுக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரை எக்ஸ்ரே எடுத்துவரச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். அதன் பேரில், எக்ஸ்ரே எடுத்த போலோ சங்கரை வயிற்றில் ஏதேதோ இருப்பது தெரியவர, உடனடியாக அவர் சி.டி.ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தப்பட்டார்.

அப்போது இந்த சந்தேகம் உறுதியானதும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் இறங்கியுள்ளனர். அப்போதுதான் அவரது வயிற்றில், ஆணி, வயர்கள், இரும்புக்குண்டுகள் இருப்பதுகண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆணியும் சுமார் 6.5 செ.மீ இருக்க, இதையெல்லாம் எப்படி அவர் உண்டார் என்று அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் தெரியவில்லையாம்.

எனினும் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது குணமாகியுள்ளார்.

Tags : #RAJASTHAN #MAN #BIZARRE #DOCTOR