முறியடிக்க முடியாத சச்சினின் 16 வருட சாதனை - காத்திருக்கும் சவால்.. முறியடிப்பாரா கோலி..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 17, 2019 11:41 AM

இங்கிலாந்தில் வரும் மே 30ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் 16 வருட சாதனை ஒன்று இந்த வருடமாவது முறியடிக்கப்படுமா என்ற ஆர்வம் இப்போதே அதிகரித்துள்ளது.

can kohli break the unbeatable record of sachin tendulkar

2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர். உலகக்கோப்பைத் தொடரில் தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. இந்த சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.  இந்தத் தொடரில் சச்சின் ஒரு சதம், 6 அரை சதங்களை அடித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 523 ரன்கள் அடித்து முதல்முதலாக 500 ரன்களுக்கு மேல் சேர்த்தவர் என்ற பெருமை பெற்றவரும் சச்சின் தான். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக மேத்யூவ் ஹேடன் (659), மஹேல ஜெயவர்த்தனே (548), மார்டின் கப்டில் (547) ஆகியோர் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெறப்போகும் இந்த ஆண்டு உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சில வீரர்கள் அந்த சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அவருக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வெஸ்ட் இன்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆகியோர் மீதும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #SACHIN #KOHLI #UNBEATABLE RECORD