'குற்றாலம் சென்று விட்டு வரும்போது நிகழ்ந்த பரிதாபம்'...லாரிக்குள் புகுந்த கார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 30, 2019 10:18 AM

லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car and Lorry Crash in Alangulam,5 people killed

திருநெல்வேலி-தென்காசி சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.இந்த சாலையில் சரக்கு லாரிகள் அதிகம் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் நடப்பதுண்டு.இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கொல்லம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.அதே நேரம் குற்றாலத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து என்ற இடத்திற்கு அருகே வரும் போது,எதிர்பாராத விதமாக காரும்,லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரிக்குள் புகுந்தது.

இதனிடையே விபத்து நடந்த பகுதியின் அருகில் இருந்த பொது மக்கள்,விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன்,காரை உடைத்து உடல்களை மீட்டனர். இதனிடையே விபத்து நடந்த உடனே அந்த பகுதியில் இருந்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதனிடையே விபத்தில் சிக்கியவர்கள் திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த முருகன், நிரஞ்சன்குமார், ராஜசேகர், இவரது 3 வயது மகள் தனிக்கா, மீனாட்சிபுரத்தை மகேஷ் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் குற்றாலம் சென்று விட்டு திரும்பும் போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.

Tags : #ACCIDENT #ROAD ACCIDENT #ALANGULAM