'மாசம் 3,000 தான் சம்பளம்'... "இருந்தாலும் என்னால முடிஞ்ச உதவி"... "அந்த வெள்ளந்தி சிரிப்போட"... "இந்த மாதிரி சாமிங்க நெறய இருக்காங்க இங்க"!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 16, 2020 12:20 PM

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் தேவையில்லாமல் பொதுவெளிகளில் சுற்றித் திரிவதை கண்காணிக்க நாடு முழுவதும் இரவு, பகல் பாராமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Women from Andhra Pradesh inspires Police by her gesture

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அந்த பகுதியிலுள்ள பெண்மணி ஒருவர் குளிர்பானங்களை வாங்கி அளித்துள்ளார். அந்த பெண்மணியிடம் போலீசார் பேசிய போது, அவருக்கு மாத சம்பளம் சுமார் 3,000 ரூபாய் என்றும், எங்களுக்காக பணிபுரிந்து வரும் போலீசாரை கவனிக்க வேண்டி இந்த குளிர் பானங்களை வாங்கி வந்தேன்' எனவும் தெரிவித்துள்ளார்.

மிக குறைவான சம்பளம் வாங்கிய போதும் அந்த பெண்மணியின் பரந்த மனம் கண்டு நெகிழ்ந்து போன போலீசார், குளிர்பானங்களை திருப்பி அவரிடம் அளித்து மேலும் சில குளிர்பான பாட்டில்களையும் கொடுத்து குழந்தைகளுக்கு அளிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்த மக்களை பார்க்கும்போது எங்களுக்கு ஒருவித உத்வேகம் கிடைக்கிறது என்ற கருத்துடன் அங்கிருந்த போலீசார் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடினமான சூழலிலும் உதவி செய்யும் பெண்மணியின் எண்ணத்தை நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.