VIDEO: சாலையில் சிந்திய பாலுக்காக... தெரு நாய்களோடு முண்டியடித்துக் கொண்ட ஏழை!.. இதயத்தை நொறுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலையில் சிந்திய பாலுக்காக மனிதனும் தெரு நாய்களும் ஆலாய்ப்பறக்கும் வீடியோ அனைவரது இதயத்தையும் நொறுக்கும் விதமாக உள்ளது.

ஒரு புறம் மருந்தில்லா கொரோனா நோயைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அவசியம் என்றாலும், இல்லாதவர்களையும் ஏழைகளையும் அது கடுமையாகப் பாதிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆங்காங்கே ஒரு பிடி சோறுக்காக அலையும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். அதில் ஒருசிலதான் நம் பார்வைக்கு வருகிறது. அந்த வகையில் காண்போரை கலங்கடிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இன்று காலை ஆக்ராவில் உள்ள ராம் பாக் சவ்ராஹா சாலையில் பால் கொண்டு செல்லும் பெரிய கன்டெய்னர் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில், கொள்கலனிலிருந்து பால் சாலையில் ஓடியது.
அப்போது சாலையில் ஆதரவற்ற மனிதர் ஒருவர், பாலை கைகளால் பானை போன்ற ஒன்றில் அள்ளி அள்ளி ஊற்றுகிறார். அவருக்கு அருகில் தெருநாய்கள் பல பாலை நக்கிச் சுவைத்துக் கொண்டிருக்கின்றன.
நாடு முழுதும் லாக்-டவுன் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், லாக் டவுன் ஆரம்பக் கட்டத்தில் ஏழைத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் அன்றாடம் உழைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள் ஆகியோர் தங்கள் ஊர்களுக்கு கால்நடையாகக் கிளம்பத் தொடங்கினர்.
நாட்டு மக்களின் நலனுக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் உண்ண உணவும், ஒதுங்க வீடும் இல்லாத ஏழை எளியவர்கள்,
Lockdown Impact:
इंसान और जानवर साथ साथ दूध पीने लगे।
आज अगरा के रामबाग चौराहे पर एक दूध वाले की दूध की टंकी गिर गयी।फिर क्या हुआ खुद देखिए। pic.twitter.com/OWvNg8EFIe
— Kamal khan (@kamalkhan_NDTV) April 13, 2020
இவ்வாறு ஒரு வேலை உணவுக்காக வறுமை எனும் வைரஸிடம் போராடி வரும் சூழல் மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தெருவில் சிந்திய பாலுக்காக மனிதனும் நாயும் ஆலாய்ப்பறக்கும் காட்சி வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
