'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு 15,000த்திற்கும் அதிகமானோர் பலியான நாடுகளில் 4வதாக பிரான்ஸ் இணைந்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் விளங்குகிறது.
ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 6821-லிருந்து 6730 ஆகக் குறைந்துள்ளது. திங்களன்று லாக்-டவுனை அதிபர் எமானுயெல் மேக்ரான் மே 11 வரை நீட்டித்தார்.
பிரான்ஸ் மருத்துவமனைகளில் மரணங்கள் 5% அதிகரித்து 15,729 ஆக கூடியுள்ளது என்று பொதுச்சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.
அதே போல் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை 5.3% அதிகரித்து மொத்தம் 103, 573 ஆக உள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று 1.7%, திங்களன்று 2.8% அதிகரிப்பு என்பதிலிருந்து 5.3% ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு கணக்கீடுகளிலிருந்து பார்த்தால் பிரான்ஸ் மக்கள் தொகையில் 5-10% மக்களுக்கு கொரோனா பாதிப்பு தொற்றியிருக்கலாம் என்று அச்சப்படுவதாக ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.