ஏப்ரல் 20 முதல் இந்த ‘தொழில்கள்’ எல்லாம் இயங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட ‘லிஸ்ட்’.. முழு விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 15, 2020 01:35 PM

ஏப்ரல் 20ம் தேதி முதல் எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி வழக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Govt announced some industries can start functioning post April 20

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஊரடங்கை மே மாதம் 3ம் தேதி நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு உள்ளதாகம் பிரதமர் தெரிவித்தார். அதே நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏப்ரல் 20ம் தேதி முதல் எந்தெந்த தொழில்கள் இயங்கும் என மத்திய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. ஏப்ரல் 20ம் தேதி முதல் அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி.

2. கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.

3. மீன்பிடி தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி.

4. தேயிலை, காபி, ரப்பர் உற்பத்தி பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.

5. ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி வங்கிகள், ஏடிஎம்-கள் செயல்படும்.

6. கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்.

7. பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம்போல நடைபெறும்.

8. அத்தியாவசிய பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை.

9. ஊரகப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம்.

10. ஊரகப் பகுதியில் உணவு பதப்படுத்தப்படும் நிறுவனங்கள் இயங்கலாம்.

11. ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

12. லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி.

13. நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி.

14. எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக்குகள், தச்சர் உள்ளிட்டோர் வேலை செய்ய அனுமதி.

15. ஏப்ரல் 20ம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி.

16. 50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தின் போதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.