"பெர்மிஷன் தேவையில்ல... இன்ஃபர்மேஷனே போதும்!".. தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 16, 2020 12:03 PM

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை; தகவல் தெரிவித்தாலே போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

volunteers can inform TN Govt officials and help amid covid19, MHC

தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கொரோனா சூழலில், பொதுமக்களுக்கு தனியாக நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

முன்னதாக தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை, அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அவர்களின் ஒத்துழைப்புடன் வழங்க தமிழக அரசால் அறிவுறுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.