‘வெளிய க்ளினிக்’.. ‘ஆனா உள்ள போனாதான் தெரியுது..’ பெண் மருத்துவர் செய்துவந்த அதிர்ச்சி காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தின் போபால் பகுதியில் உள்ளது பார்கேதி எனும் ஏரியா. இப்பகுதியில் இயங்கி வந்த கிளினிக் ஒன்று ரகசியமாக பாலியல் தொழிலை நடத்திவருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து போலீஸார் அந்த கிளினிக்கை நெருக்கமாக கண்காணித்து வந்தனர்.

அந்த கிளினிக் ஒரு பரபரப்பான ஏரியாவில் அனைவரும் கவனிக்கத்தக்கதொரு இடத்தில் இருந்தாலும் கூட, அங்கு வந்துசெல்லும் பலரின் மீதும் சந்தேகப்பட்ட போலீஸார் அங்கு பாலியல் தொழில் நடப்பதை ஊர்ஜிதப்படுத்தினர். ஆனாலும் கையும் களவுமாக இந்த கும்பலை பிடிக்க, அவர்களுக்கு ஒரு யோசனை உண்டானது.
அதற்கென, போலீஸார் ஒரு பெண் போலீஸாரை அந்த கிளினிக்கிற்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் போலீஸாரோ, அந்த கிளினிக்கிற்கு சென்றபோது கிளினிக்கில் இருந்த 52 வயதான காயத்ரி சிங் என்கிற அந்த பெண் மருத்துவரை சந்தித்து, தனக்கு வேலை வேண்டும் என்றும் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூற, அப்போது அந்த பெண் மருத்துவரோ, ‘நீயும் இங்கிருந்து இந்த பாலியல் தொழிலைச் செய்யலாம். நான் அதற்கு உதவுகிறேன்’ என்று வாழ்க்கை கொடுப்பதாக வார்த்தைகள் கொடுத்துள்ளார்.
இப்படிதான் அந்த கும்பலை கூண்டோடு போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதில் சிக்கிய அந்த பெண் மருத்துவர் தன் கணவரும் மருத்துவர்தான் என்றும், அவர் இறந்த பின்பு கடந்த 2 வருடங்களாக க்ளினிக் என்கிற பெயரில் இந்தத் தொழிலை தான் செய்துவந்ததாகவும் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
