நைட் 1 மணி.. ‘ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பெண்’.. யாருங்க இவங்க..? வைரலாகும் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநள்ளிரவு 1 மணிக்கு சாலையோரம் இருந்த மக்களுக்கு உணவளித்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது விருந்தினர்களுக்கு தடபுடலாக ஒரு உணவு பரிமாறப்பட்டது. ஆனால் உணவு அதிக அளவு மிஞ்சியுள்ளது.
உடனே மணமகனின் சகோதரி பாபியா கர் நள்ளிரவு 1 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்துக்கு அந்த உணவுகளை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோரத்தில் படுத்திருந்த மக்களுக்கு உணவுகளை வழங்கியுள்ளார்.
இதனை கவனித்த திருமண புகைப்படக் கலைஞர் நிரஞ்சன், அதனை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி பாபியா கருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags : #WOMAN #FOOD
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman distributes leftover food from brother’s wedding to needy | India News.