‘என்ன ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணையா லவ் பண்ற’!.. EX-BOYFRIEND-ஐ பழிவாங்க இளம்பெண் எடுத்த ‘விநோத’ முடிவு.. கடைசியில் போலீசில் சிக்கிய பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jul 12, 2021 07:02 PM

முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக இளம்பெண் ஒருவர் விநோதமாக யோசித்து போலீசில் சிக்கிய சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

Woman runs 49 red lights in ex\'s car in attempt to rack up fines

சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) நகரை சேர்ந்த Lou என்ற இளம்பெண், Zhu என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட வருடங்கள் காதலர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒருநாள் வந்து, நாம் பிரிந்து விடலாம் என  Zhu கூறியுள்ளார். இதனால் காதலி Lou அதிர்ச்சியடைந்துள்ளார்.

Woman runs 49 red lights in ex's car in attempt to rack up fines

இதன்பின்னர்தான், Zhu தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை காதலித்து வருவது Lou-க்கு தெரியவந்துள்ளது. இதனால் தனது முன்னாள் காதலனை Lou பழிவாங்க நினைத்துள்ளார். அதற்காக Zhu-ன் ஆடி காரை மற்றொரு நண்பர் மூலம் வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் அந்த காரை ஓட்டிச் சென்று 50 முறை சாலை விதிகளை மீறியுள்ளார். அதில் 49 முறை சிகப்பு விளக்கு விதியை Lou மீறியுள்ளார்.

Woman runs 49 red lights in ex's car in attempt to rack up fines

இதன்மூலம் தனது முன்னாள் காதலனுக்கு அதிக அளவிலான அபராதம் வரும் என எண்ணி Lou இதை செய்துள்ளார். ஆனால் இறுதியில் போலீசாரிடம் சிக்கிய Lou, முன்னாள் காதலனை பழிவாங்க, வேண்டுமென்றே சாலை விதிகளை மீறியது தெரியவந்துள்ளது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் காதலனை விநோதமாக பழிவாங்க முயற்சித்து இளம்பெண் ஒருவர் போலீசில் சிக்கிய சம்பவம் அந்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman runs 49 red lights in ex's car in attempt to rack up fines | World News.