‘எனக்கு வேற வழி தெரியல’.. மரத்துக்கு கீழே டென்ட், கையில் லேப்டாப்.. இளம்பெண் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலேப்டாப் உடன் காட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் இளம்பெண்ணின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு இணைய வசதி முக்கியம் என்பதால், பல பகுதிகளில் அது சரிவர கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இண்டெர்நெட் சரியாக கிடைக்காமல் இளம்பெண் ஒருவர் லேப்டாப் உடன் காட்டில் அமர்ந்து வேலை பார்த்து வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் வாரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. பி.காம் பட்டதாரியான இவர் பெங்களூரில் ஒரு ஆடிட்டரிடம் வேலை பார்த்து வருகிறார். தற்போது அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தனது சொந்த ஊருக்கு சிந்து வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் இருந்தே செல்போன் WiFi மூலம் லேப்டாப்-ல் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் வீட்டில் இண்டெர்நெட் சரியாக கிடைக்காததால், தினமும் வேலையை முடிக்க தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் தனது கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சிக்னல், இணைய வசதி கிடைக்கிறதா எனப் பார்த்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் சிக்னல் கிடைக்கவே, அங்கேயே ஒரு மரத்துக்கு அடியில் கூடாரம் அமைத்து வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், நகரங்களை போல கிராமப்புற வளர்ச்சியையும் கண்காணிக்க வேண்டும் என அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
