‘கடும் உணவு பஞ்சம்’!.. ஒரு கிலோ ‘வாழைப்பழம்’ இவ்ளோ விலையா.. பரிதாப நிலையில் வடகொரியா..!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிங்ஜாங்உன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக அந்நாட்டு அதிபர் கிங்ஜாங்உன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். வடகொரியாவுக்கு சீனாவில் இருந்துதான் பல்வேறு உதவிப்பொருட்கள் வந்து கொண்டு இருந்தன. ஆனால் அவற்றுக்கும் அதிபர் கிங்ஜாங்உன் தடை விதித்தார்.
பொருட்கள் வருவது தடைப்பட்டதால், விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கருவிகள் போன்றவை வரவில்லை. இதன்காரணமாக அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் புயல் காரணமாகவும் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் மக்களுக்கு போதிய உணவு பொருட்கள் கிடைக்கவில்லை.
வடகொரியா மக்கள் அரிசி, மக்காசோளம் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுபவர்கள். அதில், அரிசிக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற உணவு பொருட்களும் போதுமானதாக இல்லை. இதனால் 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
அந்நாட்டில் 1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது. பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும், அவர்களில் பலர் 2 நாட்களுக்கு ஒருமுறைதான் சாப்பிடுவதாகவும் Reuters செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தங்கள் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அதிபர் கிங்ஜாங் உன்னும் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தில் 30 லட்சம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
