ப்ளீஸ், கொஞ்சம் 'கம்மியா' சாப்பிடுங்க...! 'அதிகமா சாப்பிட்டா நிலைமை கைமீறி போயிடும்...' 'சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்...' - குண்டை தூக்கி போட்ட கிம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய அதிபர் அந்நாட்டு மக்களுக்கு போட்டுள்ள உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வடகொரியாவின் ஒரே நட்பு நாடு சீனா. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வடகொரியா சீனா உடனான பல வர்த்தகங்களை துண்டித்தது. அதனால், வடகொரியாவில் சில மாதங்களாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.
ஆனால், இப்போது உணவு பற்றாக்குறை கடும் உணவு பஞ்சமாக உருவெடுத்துள்ளது. சீனா தனது எல்லைகளை கொரோனா பரவல் காரணமாக மூடியுள்ளது. அதனால், சீனாவிலிருந்து கிடைக்கும் விவசாயப் பொருட்கள், உரங்கள் போன்ற உதவிகள் வடகொரியாவுக்குக் கிடைக்காமல் நின்றுபோகியுள்ளது.
அதோடு, ஏற்கனவே வடகொரியாவில் புயல் காரணமாக விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அங்கு உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். பல்வேறு உணவுப் பொருட்களின் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
எதற்கும் அடாவடியாக பேசும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் நாட்டில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதோடு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது நாட்டு மக்களுக்கு குறைவாக சாப்பிடுமாறும் கூறியுள்ளார்.
மேலும், உணவு பற்றாக்குறைக்கு காரணம் விவசாயத் துறை தனது தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியது தான் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
மேலும், 2025 வரை சீனாவுடனான வர்த்தகம் தொடங்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள வடகொரிய அதிகாரிகள், இந்த உணவு பஞ்சம் 2025-ஆம் ஆண்டு வரை தொடரும் எனவும் கூறிவருகின்றனர்.