'ஒரே பிரசவத்தில்... 10 குழந்தைகள்' பெற்றெடுத்ததாகக் கூறிய பெண் கைது!.. பூதாகரமான விவகாரம்!.. மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தாகக் கூறப்பட்ட பெண்ணின் வாழ்க்கை ஒரே இரவில் அதிர்ச்சி திருப்பங்களை எதிர்கொண்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கடந்த வாரம் செய்தி வெளியானது.
ஜூன் 7 ஆம் தேதி பிரிட்டோரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கோஷியாமே தாமரா சிதோலே என்ற பெண்ணுக்கு 10 குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளில் பெண்கள் 3 பேர், ஆண்கள் 7 பேர். குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
எனினும் உடல் நலனை கருத்தில் கொண்டு சில மாதங்கள் இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என செய்தி வெளியானது. இது உலக சாதனையாகவும் கருத்தபட்டது. தற்போது இந்த 10 குழந்தைகள் பிறப்பு விவகாரத்தில் சந்தேகம் எழுந்து உள்ளது.
கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களுக்கு வெளிப்படையான பிறப்பு செய்தியை முதலில் உடைத்தவர் சோடெட்சி, தனது காதலி ஏழு சிறுவர்களையும் மூன்று சிறுமிகளையும் பெற்றெடுத்ததாக பிரிட்டோரியா செய்திக்கு தெரிவித்தார். 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச முடியாது' என்று அவர் அப்போது கூறினார்.
இந்த செய்தி விரைவாக உலகம் முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து, கர்ப்பம் மற்றும் பிறப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
பிரிட்டோரியில் உள்ள மெட்லினிக் மெட்போரம் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் பிரிட்டோரியா அமைந்துள்ள குவாத்தெங் மாநிலத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும் பிரசவம் நடந்ததாக தங்களுக்கு எந்த பதிவும் இல்லை என்று கூறுகிறார்கள்.
சிதோலே கணவர் சோடெட்சி பத்து குழந்தைகள் இருப்பதாக தான் நம்பவில்லை என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து, இந்த சந்தேகம் வலுவானது. 10 குழந்தைகள் வெளி உலகிற்கு இதுவரை காட்டப்படவில்லை. பிரசவத்தை சரிபார்க்க எந்த டாக்டரும் இதுவரை முன்வரவில்லை. குழந்தைகளின் படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
10 குழந்தைகள் பிறந்தன என்பது விளம்பரத்திற்காகவும், நன்கொடைக்காகவும் கூறியது என கூறப்படுகிறது.
பிறப்பு உண்மையானது என்று உறுதிப்படுத்தப்பட்டால், அது ஒரு உலக சாதனையாக இருக்கும். மொலிக்கோவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்ற ஹலிமா சிஸ்ஸே என்ற மாலியன் பெண் தற்போது வரை உலக சாதனையாளராக உள்ளார். அவர் 9 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
இந்த் நிலையில், சிதோலே கைது செய்யப்பட்டு மனநல சிகிச்சைக்காக ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டெம்பீசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஜூன் 17 வியாழக்கிழமை அதிகாலையில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள உறவினர் வீட்டில் போலீஸ் அதிகாரிகளால் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரது தடுப்புக்காவலுக்கு எதிரான போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சிதோலே 10 குழந்தைகள் பெற்று எடுக்கவில்லை என தென்னாப்பிரிக்கா தேசிய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவின் தேசிய சுகாதாரத் துறை கூறுகையில், குழந்தைகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அதன் சொந்த விசாரணையில் முடிவு செய்து கூறி உள்ளது.
இன்டிபென்டன்ட் மீடியா தொடர்ந்து பிறப்புகள் உண்மையானவை என்று வலியுறுத்தி வருகின்றன, மேலும், மருத்துவ அலட்சியத்தை மறைக்க அதிக குழந்தை பிறப்பை மூடிமறைப்பதாக கூறியுள்ளன. எவ்வாறாயினும், குழந்தைகள் இருக்கும் இடம் "தெரியவில்லை" என்று அது ஒப்புக்கொண்டது.
சிதோலின் வழக்கறிஞர் ரெபிலோ மோகோனா தனது விருப்பத்திற்கு எதிராக சிதோலே காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்காக நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, "சிதோலே மனநல சிகிச்சைக்காக டெம்பீசா மருத்துவமனைக்கு செல்ல என்று மறுத்துவிட்டார். ஏனெனில் அவர் நல்ல மனதுடன் இருப்பதாக அவர் உணர்ந்தார்.
மருத்துவமனையின் மனநல வார்டில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவர் 'மன சித்திரவதை' மற்றும் 'பட்டினியால்' பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவருக்கு 'கைவிலங்கு' போட்டப்பட்டு உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
