MKS Others

நெல் அறுவடையின்போது வயலுக்குள் இருந்து அச்சுறுத்திய முதலை... அச்சத்தில் விவசாயிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Rahini Aathma Vendi M | Dec 06, 2021 06:16 PM

விவசாயி ஒருவரின் நெல் வயலில் அறுவடையின் போது முதலை ஒன்று வயலில் இருந்துள்ளது. இதனால், விவசாயிகள் பதறிய காரணத்தால் விவசாயப் பணிகள் நடைபெற தாமதம் ஆகின.

crocodile found in farmer\'s paddy field: video gets viral

கர்நாடக மாநிலம் கொப்பாலா மாவட்டம் நந்திஹள்ளி கிராமத்தில் ஒரு விவசாயி தனது நெல் வயலில் அறுவடை  இயந்திரம் கொண்டு நெல் அறுவடை செய்யும் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெல் அறுவடை இயந்திரத்திற்கு முன்னே வயலுக்குள் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தினார்.

crocodile found in farmer's paddy field: video gets viral

இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் வயலுக்குள் இருந்த முதலையை இலாவகமாக பிடித்து பாதுகாப்பாக நீர் நிலையில் விடுவித்தனர். கொப்பாலா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது இந்த மழை காரணமாக நீர் நிலையில் இருந்த முதலை இடம்பெயர்ந்து வயல்வெளிக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

crocodile found in farmer's paddy field: video gets viral

முதலை அச்சத்தால் விவசாயிகள் அறுவடை செய்யும் பணிகளில் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. விவசாயி வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பெயரில் அவர்கள் வந்து முதலையை மீட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

Tags : #KARNATAKA #CROCODILE IN FARM #FARMERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Crocodile found in farmer's paddy field: video gets viral | India News.