'இது ஆப்பரேஷன்ல நடந்த தப்பு...' 'வயிற்று வலியால் துடித்த பெண்மணி...' - 'ஸ்கேன் ரிப்போர்ட்' பார்த்து 'மிரண்டு' போன டாக்டர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்தவர் நீலவேணி. இவர் சில மாதங்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பரிசோதனையில் நீலவேணிக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்பின் அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.
சிகிச்சை முடிந்து நீலவேணி வீடு திரும்பிய சில நாட்களில் அவருக்கு வயிற்றில் வலி ஏற்படவே மீண்டும் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அந்த தனியார் மருத்துவமனை நீலவேணிக்கு எந்தவித பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில், நீலவேணிக்கு கடுமையான வயிற்று வலி வரவே உயிருக்கு பயந்து ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவருடைய வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீலவேணி, தவறான சிகிச்சை அளித்தது குறித்து விளக்கம் கேட்க சென்றபோது தனியார் மருத்துவமனை நிர்வாகம் விரட்டி அடித்ததாக செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.