தாலிபான்கள் அச்சுறுத்தலை விட... மிகப்பெரும் துன்பத்தில் ஆப்கான் மக்கள்!.. மூடி மறைக்கப்பட்ட நரக வேதனை அம்பலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உணவுப்பொருட்கள் வாங்க பணமின்றி மக்கள் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷர்ஃப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதற்கிடையே, தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க, நாட்டை விட்டு வெளியேற ஒரே வழி காபூல் விமான நிலையம் என்பதால், தலைநகரில் கடந்த 9 நாட்களாக பதற்றம் நீடித்து வருகிறது.
அதேசமயம், தாலிபான்களால் கைப்பற்றப்பட்டு 9 நாட்கள் ஆகியும், இன்னும் காபூலில் வங்கிகள், பள்ளிகள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதால் காபூலில் பெரும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், அவை வேலை செய்யாததால் ஆப்கானில் உள்ள பலதரப்பட்ட மக்களும் உணவுப்பொருட்கள் வாங்க பணமின்றி தவித்து வருகின்றனர்.
இதன் விளைவாக, உணவு மற்றும் பிற பொருட்களின் விலைகள் பட மடங்கு உயர்ந்துள்ளன. இதுகுறித்து, "எங்களிடம் பணம் இல்லை. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது" என்று காபூல் வாசி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானை விட்டு கடைசி அமெரிக்க இராணுவ வீரர் வெளியேறிய பிறகு தான் புதிய அரசாங்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானில் உள்ள வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேற, ஆகஸ்ட் 31ம் தேதி வரை தலிபான்கள் காலக்கெடு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
