ஒரு காலத்துல 'அரசன்' மாதிரி வாழ்ந்த மனுஷன்...! இன்னைக்கு 'எங்கோ' ஒரு மூலையில 'டெலிவரி பாயா' வாழ்ந்திட்டு இருக்காரு...! - 'யாரு'ன்னு தெரியுதா...?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் நடைபெற்று வந்த போரின் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தொலைத்து உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.
இந்நிலையில் தாலிபான் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்பு இருந்த ஆட்சியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் சையத் அகமத்.
இவர் கடந்த ஆண்டு தனது தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதன்பின் ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குக் குடிபெயர்ந்தார். தற்போது அவரின் உணவு டெலிவரி செய்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஜெர்மனியில் செயல்படும் லீப்ஸிகர் வோல்க்ஸீயுடங் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.
அதில், 'நான் இப்போது ஒரு எளிமையான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இப்போது தான் நான் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.
ஜெர்மனி வந்த போது பல பணிகளுக்கு முயற்சி செய்து கிடைக்காத சூழலில் தான் இந்த டெலிவரி பணியை மேற்கொண்டேன். இதில் வரும் பணத்தைச் சேமித்து தான் ஜெர்மன் மொழியை கற்று வருகிறேன். ஜெர்மன் டெலிகாம் துறையில் பணிக்குச் சேர்வதுதான் தற்போது என் இலக்காக உள்ளது' எனக் கூறினார்.