ஒரே பிரசவத்தில் ‘10 குழந்தைகள்’ பெற்று உலக சாதனை படைத்த பெண்.. இன்ப அதிர்ச்சியில் கணவர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் கோஷியாமி தமாரா சித்தோல் (37 வயது). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி கோஷியாமி தமாரா சித்தோலுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள். தற்போது தாயும், 10 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய கணவர் டெபோஹோ சோடெட்சி, ‘நான் ரொம்ப சந்தோஷமாக உள்ளேன். இப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் என்னால் பேசமுடியவில்லை’ எனக் கூறி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
முன்னதாக மாலி நாட்டைச் ஹலிமா சிசி என்ற 25 வயது இளம்பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க பெண் கோஷியாமி தமாரா சித்தோல், 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார். தற்போது இதுதான் உலக சாதனையாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
