MKS Others

VIDEO: யாருப்பா இவரு..? கிரவுண்ட்ல ‘நீச்சல்’ அடிச்சிட்டு இருக்காரு.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 06, 2021 06:08 PM

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மைதானத்தில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shakib Al Hasan skidding through wet covers after rain washed out play

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

Shakib Al Hasan skidding through wet covers after rain washed out play

இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Shakib Al Hasan skidding through wet covers after rain washed out play

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் திடீரென மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீரில் குதித்து விளையாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #BANVPAK #SHAKIBALHASAN

மற்ற செய்திகள்