‘குறுக்கே எதுவும் இல்லை என நினைத்து கண்ணாடிக் கதவில் மோதி’.. “ஒன்னும் ஆகல” என எழுந்து சகஜமாகிய பின் உயிரிழந்த பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் வங்கி ஒன்றுக்குள் சென்ற 46 வயது மதிக்கத்தக்க பெண் வாடிக்கையாளர் ஒருவர் வங்கியில் தனது அலுவல் நிமித்தமாக சென்றுள்ளார்.

அப்போது தனது சாவியை மறந்துவிட்டதாக, மீண்டும் வண்டிவரை சென்று சாவியை எடுக்கச் சென்ற அப்பெண், வங்கியின் வாசலில் இருந்த கண்ணாடிக் கதவு இருந்தது தெரியாமல், ஓடிச்சென்று கதவை உடைத்து சிக்கிக் கொண்டார்.
உடனே அவர் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர், உதவிக்கு வர முனைந்தனர். ஆனால் அதற்குள் அப்பெண்மணி நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். பின்னர் எழுந்து நின்று சகஜமாகினார். ஆனால் அதன் பின்னர்தான் கண்ணாடிக் கதவு தன்னை வெட்டியுள்ளதை கீழே இருந்த ரத்தத் துளிகளை பார்த்து அறிந்துகொண்டார்.
இதனை அடுத்து அவரும் நிலைகுலைந்து விழப் போனார் அருகில் இருந்த ஒருவர் அவருக்கு நாற்காலியை எடுத்துத் தர, சிறிது நேரத்தில் அங்குவந்த போலீஸாரின் உதவியுடன் அப்பெண் பெரும்பாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

மற்ற செய்திகள்
