'33 கோடியே ஒண்ணு...' 'தாயே கொரோனா...' உனக்கு 'முக்கால பூஜை' நடத்துறோம்... 'கொஞ்சம் அமைதியா இரு...' 'சேட்டனின்' வேற லெவல் 'முயற்சி...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,24,000 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு உள்ளன. சமீபத்தில் தான் படிப்படியாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.
இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டபோது, "33 கோடி இந்து கடவுள்களுடன் கூடுதலாக மேலும் ஒரு கடவுள். தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துவேன், எனத் தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்கெனவே பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது போல் தற்போது இந்த கொரோனா தேவி கோயிலும் உருவாக்கப்பட்டள்ளது. தெர்மோகால் மூலம் கொரோனாவின் உருவம் தயாரிக்கப்பட்டு, ‘பல்லிவல்’ மீது அமர்ந்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தேவி எந்த ‘மூலமந்திரமும்’ இல்லாத தெய்வம் ஆகும்.
மேலும் இதுகுறித்து குறிப்பிட்ட அணிலன், இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல, அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல. எனக் கூறினார்.