புதுக்கோட்டையில் ‘ஹெலிகாப்டர்’ வெடித்து சிதறியதா?.. தீயாய் பரவிய தகவல்.. உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை அருகே சிறிய ரக ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் காலை 10 மணியளவில் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று வேகமாக பரந்துள்ளது. அந்த சமயம் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் வேலி மரங்கள் 2 ஏக்கர் பரப்பளவில் எரிந்துள்ளன.
இதைப் பார்த்த மக்கள் அப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். ஆனால் அப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இந்த நிலையில் சிலர் அங்கு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுவிட்டதாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
கலிபோர்னியாவில் நடைபெற்ற வேறொரு ஹெலிகாப்டர் விபத்து பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி புதுக்கோட்டையில் நடந்ததாக வதந்தி பரப்பியுள்ளனர். இந்த தகவலை தாசில்தார் மார்டின் லூதர் கிங் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tweet regarding helicopter crash in Tamil Nadu's Pudukkottai withdrawn because of incorrect information. Error regretted. https://t.co/1nFljDyQYd
— ANI (@ANI) June 12, 2020

மற்ற செய்திகள்
