'யானை' சாப்பிட்டது 'அன்னாச்சி பழம்' அல்ல... வெளியானது 'அட்டாப்ஸி ரிப்போர்ட்...' 'மத்திய அமைச்சகம்' வெளியிட்ட 'புதிய தகவல்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் உயிரிழந்த யானை சாப்பிட்டது அன்னாச்சி பழம் அல்ல என்றும், பன்றிக்காக வைக்கப்பட்ட வெடிபொருட்கள் கலந்த தேங்காயை, யானை தெரியாமல் சாப்பிட்டு விட்டதாகவும் மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்று தாடை உடைந்து கடந்த மாதம் 27-ம் தேதி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து, இதற்குக் காரணாமனவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் வலுத்தன. இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் கேரள மாநில அரசினர் இந்த விவாகாரத்தில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கின.
உடற்கூறாய்வு அறிக்கை வெளியானபோதுதான், அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தற்போது யானையின் அட்டாப்ஸி அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் யானை சாப்பிட்டது தேங்காய் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைதும் செய்யபட்டு இருந்தார்.
இந்நிலையில், யானை தவறுதலாக வெடிபொருட்கள் வைத்திருந்த தேங்காயை உண்டுவிட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பன்றிக்கு வைத்திருந்த வெடிபொருள் நிறைந்த பழத்தை யானை உண்டு விட்டது என்று செய்திகள் பரவி வரும் நிலையில், அதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.