'அவர் முகத்த ஒரு தடவ எனக்கு காட்டுங்களேன்...' 'கதறிய மனைவிக்கு கடைசியில...' கணவர் இறந்து போன விஷயமே இப்படி தான் தெரிஞ்சுருக்கு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 11, 2020 04:23 PM

துபாயில் பணிபுரியும் நிதின் மற்றும் ஆதிரா தம்பதியினர் கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் திருமணமான இத்தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில், இந்த குடும்பத்தில் நடந்த சம்பவம் மக்களின் உள்ளங்களை கலங்கடிக்க செய்துள்ளது.

Allow 2 minutes for spouse to see the body of her husband

துபாயில் தலைதூக்க தொடங்கிய கொரோனா பரவலால், குழந்தைக்கும் மனைவிக்கும் எதுவும் ஆக கூடாது என்றும், இங்கு பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் நினைத்த நிதின் மனைவியை கேரளத்திற்கு அனுப்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். அதுமட்டுமில்லாமல் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடி கடந்த ஏப்ரல் மாதம் நிதின் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். நிதின் மனைவி ஆதிரா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதல் விமானத்திலேயே கேரளா அழைத்து வரப்பட்டார்.

மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பிய நிம்மதியில் நிதின் தன் பணியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளளார். அதனால் நிதினிக்கு முன்பு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கும், ஹைப்பர் டென்க்ஷனுக்கும் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்ள தட்டிக்கழித்துள்ளார்.

இந்த நிலையில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு துபாய் மருத்துவமனையில் இறந்துள்ளார். இந்நிலையில் ஆதிராவிற்கும் பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆதிராவின் உடல்நிலையை கருத்தில் கொண்ட மருத்துவர்களும், உறவினர்களும் நிதின் இறந்ததை ஆதிராவிடமிருந்து மறைத்துள்ளனர்.

ஆதிராவிற்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனை கணவனிடம் சொல்ல நினைத்த போது சாக்குபோக்கு சொல்லி குடும்பத்தார் ஆதிராவை  சமாதானம் செய்துள்ளனர்.

கொரோனா பரிசோதையில் நிதினுக்கு நெகடிவ் வரவே அவரின் உடல் நேற்று தான் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டது. குழந்தை பிறகு இரண்டு நாட்கள் பிறகே கணவன் இறந்த செய்து ஆதிராவிற்கு சொல்லியுள்ளனர்.

கதறி அழுத ஆதிரா 'என் கணவரின் முகத்தை ஒரு முறையாவது காட்டி விடுங்கள்' என கெஞ்சியுள்ளார். இதையடுத்து, ஆதிரா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நிதின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டது.

கணவரின் உடல் வைத்திருந்த ஆம்புலன்சிடம் வந்த ஆதிரா கத்தி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்க செய்துள்ளது. வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே நிதினின் முகம் அவருக்கு காட்டப்பட்டது.' உங்க முகத்தை கூட பார்க்க முடியாத பாவியாகி விட்டேனே' என்று புலம்பி அழுதுள்ளார் ஆதிரா.

தன் அழகான குழந்தை உடன் வாழ்க்கை தொடங்க துவங்கிய புதுமண தம்பதிகளுக்கு நிகழ்த்த இந்த கொடுமையான சம்பவம் அனைவரது மனதையும் கலங்கடித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Allow 2 minutes for spouse to see the body of her husband | India News.