கொரோனாவிற்கு மத்தியிலும்... ஐடி ஊழியர்களுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'பிரபல' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தற்போது வீடுகளில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். சில நிறுவனங்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் வகையில் தேவையான உபகரணங்களை வாங்கிட தங்களது ஊழியர்களுக்கு தேவையான நிதியுதவியும் அளித்து வருகின்றன.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் ஐடி நிறுவனங்களும் கொரோனாவுக்கு தப்பவில்லை. இதனால் தற்போதைய சூழ்நிலையில் புதிய பணியமர்த்தல் இல்லை என்று தெரிவித்து வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்களது ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய பணியமர்த்தல் உண்டு என்று தெரிவித்து இருக்கிறது. அதிலும் இந்தியாவில் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்று கூறியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மூன்று தரவு மையங்கள் (டேட்டா சென்டர்) இருக்கும் சூழ்நிலையில், இன்னும் இதை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆனந்த் மகேஷ்வரி சமீபத்தில் அளித்த பேட்டியில், '' இந்தியாவில் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்துவோம். எங்கள் நிறுவனம் இந்தியாவில் தனது பணிகளை பராமரிக்க விரும்புகிறது. தற்போது மூன்று தரவுகளை கொண்டாலும் விரிவாக்கம் செய்து வருகிறது. எங்களின் முதலீடுகள் தொடர்ந்து டிஜிட்டல் திறன்களை உருவாக்கும். கண்டுபிடிப்புகளை உருவாக்கும்,'' என்று தெரிவித்து இருக்கிறார்.
மைக்ரோசாப்ட்டின் இந்த விரிவாக்க பணியால், ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஐடி ஊழியர்களுக்கு உண்மையிலேயே இது நல்ல செய்தி தான்!