'கொரோனாவால் தள்ளி போன திருமணம்'... 'கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளுக்கு டும் டும் டும்'... 'மாப்பிள்ளை யார் தெரியுமா'?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகளுக்கு 15-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இது இருவருக்கும் மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், தகவல் தொழில் நுட்ப நிபுணரான பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வீணாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அது விவகாரத்தில் முடிந்தது.
இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து, மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருக்கும் முகமது ரியாசுக்கும் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். முகமது ரியாஸின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், அவர் வீணா விஜயனை மணக்க இருக்கிறார். தீவிர அரசியலில் இருக்கும் முகமது ரியாஸ் சட்டம் படித்தவர். இவர் கடந்த 2009ம் ஆண்டு கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். இரண்டு பேரின் குடும்பமும் அரசியல் குடும்பம் என்பதால் இந்த திருமணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனிடையே இவர்களின் திருமணம் ஏற்கனவே நடப்பதாக இருந்தது. கொரோனா பிரச்சினையால் திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி இவர்களின் திருமணம் நடக்க இருக்கிறது. முகமது ரியாஸ் - வீணா திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வருகிறார்கள். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.