சுற்றுலா போன காதலனுக்காக தேர்வு எழுத போன பெண்.. உண்மை தெரிய வந்ததும் நேர்ந்த பரிதாபம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 27, 2022 06:22 PM

தனது காதலருக்காக இளம் பெண் ஒருவர் உதவி செய்ய போய், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Woman attended exam for her lover action taken reportedly

Also Read | "ஏலத்துல என்னை மும்பை அணி எடுத்த 2 நிமிஷத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு".. சூரிய குமார் பற்றி மனம் திறந்த இளம் வீரர்..!

குஜராத்தில் உள்ள வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பிகாம் மூன்றாம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற்றதாக தகவல்கள் தெரிகின்றது. அப்படி ஒரு சூழலில் தேர்வு நடந்த போது அங்கே குழு ஒன்று பரிசோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது குற்றம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் விசாரணை நிறைவடைந்துள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிகாம் தேர்வு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் அங்கே பரிசோதனை குழு ஒன்று சோதனை மேற்கொண்ட போது கடும் பரபரப்பு தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதிக் கொண்டிருக்க அவர் மீது சந்தேகத்தில் விசாரித்த போது அந்த பெண் தனது காதலனுக்காக தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக ஆசிரியர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கம்ப்யூட்டர் உதவியுடன் ஹால் டிக்கெட்டில் சில மாற்றங்களை செய்து பிரின்ட் எடுத்து தேர்வு அறைக்குள் நுழைந்ததையும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தேர்வில் பார்வையாளர் தினந்தோறும் மாறிக் கொண்டிருப்பதால் மாணவர்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமமாக இருந்த சூழலில், ஹால் டிக்கெட் தினமும் பரிசோதிக்கப்பட்டு வரும். அப்போது அந்த இருக்கையில் வேறு ஒரு மாணவன் அமர்ந்து இருந்ததாகவும் இன்று அந்த இடத்தில் பெண் ஒருவர் இருப்பதையும் அருகே இருந்த மாணவி கூறியதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அந்த பெண் பிடிபட்ட பிறகு அந்த சம்பந்தப்பட்ட மாணவனும் அவருடைய காதலனும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர் உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்று இருந்ததாகவும், அதனால் தேர்வு எழுத முடியாமல் போன ஒரு சூழலில் அவரது காதலியை பிகாம் தேர்வு எழுத திட்டம் போட்டு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

அதே போல அந்த மாணவன் தொடர்ந்து தேர்வில் தோல்வி அடைந்து வந்ததால் அவருக்கு பதிலாக அவருடைய காதலி தேர்வு எழுத முடிவு செய்துள்ள நிலையில், தேர்வுக்கு எழுத வந்த இடத்தில் அவர் சிக்கி உள்ளார்.

இத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் பிகாம் பட்டப்படிப்பை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அரசாங்க வேலை கூட அவர் இழக்க நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read | பனிக்குள் தெரிந்த முகம்.. அலறிய பொதுமக்கள்.. தனது பிறந்தநாளை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

Tags : #WOMAN #ATTEND #EXAM #LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman attended exam for her lover action taken reportedly | India News.