"நான் ஒரு தாய் தான், ஆனா அதே நேரத்துல".. குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பெண் MLA!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் நாக்பூரில் துவங்கியுள்ளது.
பொதுவாக சட்டப்பேரவை கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் சமயத்தில் அதை சுற்றி நடைபெறும் பல விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி நாட்டு மக்கள் மத்தியில் கவனம் பெறவும் செய்யும்.
அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர், வருகை புரிந்த,விதம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
நாசிக் தியோலாலி தொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பெண் எம்எல்ஏ தான் சரோஜ் பாபுலால் அஹிரே. இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவங்கி உள்ள ஒரு சூழலில் அதனை தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக தனது இரண்டு மாத ஆண் குழந்தையுடன் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே அவைக்கு வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரோஜ் பாபுலால் அஹிரே, "நான் ஒரு குழந்தைக்கு தாய். அதே வேளையில் மக்களின் பிரதிநிதி. கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கொரோனா தொற்று நோயால் நாக்பூரில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறவில்லை. தற்போது நான் ஒரு குழந்தைக்கு தாய் தான் என்றாலும் எனது கருத்துக்களை முன்வைக்கவும், தொகுதி சார்பாக கேள்விகள் கேட்கவும் என்னுடைய தொகுதியின் வாக்காளர்களுக்கான பதில்களை பெறவும் இங்கு வந்துள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் இங்கு வந்துள்ளனர். அவைக்குள் நான் சென்றதும் அவர்களின் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
கூட்டத் தொடரின் முதல் நாளில் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் அதிக அளவில் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | கபடி, டான்ஸ்... இப்ப குத்துச் சண்டை.. ட்ரெண்டிங்கில் ' 'அமைச்சர்' & நடிகை ரோஜா!!