பனிக்குள் தெரிந்த முகம்.. அலறிய பொதுமக்கள்.. தனது பிறந்தநாளை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Dec 27, 2022 05:08 PM

அமெரிக்காவில் வீசிய பனிப்புயலின் காரணமாக இதுவரையில் 34 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தங்களது உறவினரை காணவில்லை என ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சமூக வலை தளங்களில் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர் பனியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் உலுக்கி இருக்கிறது.

Man found frozen to death in the snow on his birthday in USA

Also Read | "ஏலத்துல என்னை மும்பை அணி எடுத்த 2 நிமிஷத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு".. சூரிய குமார் பற்றி மனம் திறந்த இளம் வீரர்..!  

வழக்கமாக கிறிஸ்துமஸ் நேரத்தில் அமெரிக்காவில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த முறை ஆர்டிக் பகுதியில் இருந்து வீசிய பனிப்புயல் மொத்த அமெரிக்காவையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது. இந்த புயல் காரணமாக சாலைகள் எங்கும் பனி நிறைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், விமான சேவைகளையும் சில மாகாணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் பஃபெல்லோ பகுதியை சேர்ந்த வில்லியம் க்ளே என்பவர் கடந்த 24 ஆம் தேதி வெளியே சென்றிருக்கிறார். அன்று அவரது பிறந்தநாள். கிறிஸ்துமஸ் ஈவ் எனப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் தினமும் அதுதான் என்பதால் பலரும் அன்றைய தினத்தில் வெளியே சென்று ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.

Man found frozen to death in the snow on his birthday in USA

அந்த வகையில் வில்லியம் அந்த நாளை கொண்டாட வெளியே சென்றிருக்கிறார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சமூக வலை தளங்களில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு, அவரை காணவில்லை எனவும் அவரை பற்றிய தகவல் கிடைத்தால் பகிருமாறும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என வில்லியமின் குடும்பத்தினர் அச்சமடைந்த நிலையில் சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் ஒருவருடைய உடல் பனிக்குள் கிடப்பது தெரியவரவே, குடும்பத்தினர் அது வில்லியமின் உடல் தான் என்பதை உடனடியாக அறிந்துகொண்டனர். இதனையடுத்து அவரது உடலை அதிகாரிகளின் உதவியுடன் கைப்பற்றிய வில்லியமின் குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்த நிதி திரட்டி வருகின்றனர்.

Man found frozen to death in the snow on his birthday in USA

நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் இதுபற்றி குறிப்பிடுகையில் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, பஃபெல்லோவில் உள்ள ஒவ்வொரு தீயணைப்பு இயந்திரமும் கடுமையான பனி காரணமாக சிக்கித் தவித்ததாகவும், பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதிக்கப்பட்ட ஓட்டுநர் தடையை கடைபிடிக்குமாறும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி அவர் பேசுகையில் "பஃபெல்லோவின் நீண்ட வரலாற்றில் மிகவும் அழிவுகரமான புயல் இது. ஏனெனில் அதன் மூர்க்கத்தனம் மற்றும் அவசரகால சேவைகளில் கடுமையான தாக்கத்தை இந்த புயல் ஏற்படுத்தி இருக்கிறது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

Also Read | மறைந்த ஷேன் வார்னே-வுக்காக திரண்ட ரசிகர்கள்.. மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. நெட்டிசன்களை கலங்க வச்ச வீடியோ..!

Tags : #MAN #FROZEN #SNOW #BIRTHDAY #USA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man found frozen to death in the snow on his birthday in USA | World News.