டெஸ்ட் மேட்சா?.. T20- யா?.. மகள்களுடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய இந்திய வீரர் ரவி அஸ்வின்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Dec 27, 2022 05:36 PM

உலகளவில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Ravichandran Ashwin Playing Cricket with His Daughters

குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின், பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறார். உலக அரங்கில் சிறந்தவொரு டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார் அஸ்வின்.

Also Read | "தம்பி பெரிய கிரிக்கெட் பிளேயரா வரணும்".. சகோதரனுக்காக அண்ணன் செஞ்ச தியாகம்.. ஐபிஎல் ஏலத்தில் பட்டையை கிளப்பிய பின்னணி!!

கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில், அஸ்வினுக்கு அதிக வாய்ப்பு கிடைக்காமல் போனது. தொடர்ந்து, வெளிநாட்டு மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினுக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதும், தனது விடாமுயற்சியால், தன்னை கவனிக்க வைத்த அஸ்வின், தற்போது டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கி அசத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல், கடந்த வருடம் நடந்த டி 20 உலக கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இடம்பெற்றிருந்தார்.

Ravichandran Ashwin Playing Cricket with His Daughters

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் & டெஸ்ட் தொடரினை  கைப்பற்றியது.

குறிப்பாக டாக்காவில் நடந்த இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Ravichandran Ashwin Playing Cricket with His Daughters

பின்னர் வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய ஸ்கோர் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் தொடக்க டாப் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக மேட்ச் பரபரப்பான கட்டத்தை எட்டியது.

இருப்பினும் அஸ்வின் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் 42* ரன்களும் ஷ்ரேயாஸ் 29* ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முக்கியமான நேரத்தில் 42 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்களையும் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Ravichandran Ashwin Playing Cricket with His Daughters

தற்போது வங்கதேச சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்திய அணி இந்தியா திரும்பியுள்ளது.  இந்நிலையில் இந்திய வீரர் ரவி அஸ்வின் தனது மகள்கள் ஆத்யா & அகிரா உடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Also Read | "ஏலத்துல என்னை மும்பை அணி எடுத்த 2 நிமிஷத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு".. சூரிய குமார் பற்றி மனம் திறந்த இளம் வீரர்..!

Tags : #RAVICHANDRAN ASHWIN #RAVICHANDRAN ASHWIN PLAYING CRICKET #DAUGHTERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravichandran Ashwin Playing Cricket with His Daughters | Sports News.