சென்னையில் விசேஷ வீட்டில் செண்டை மேளம் அடித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. வைரலாகும் வீடியோ.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உற்சாகத்துடன் செண்டை மேளம் அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | வரதட்சணையாக கிடைத்த கார்.. கல்யாணம் பண்ண கையோட மாப்பிள்ளை செஞ்ச விஷயம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மேற்குவங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவிற்கு வருகை தந்த மம்தா பானர்ஜி, அங்கு செண்டை மேளம் வாசிப்பதை ஆர்வத்துடன் கண்டு களித்தார். பின்னர், இசை கலைஞர்களுடன் இணைந்து தானும் செண்டை மேளத்தை அவர் வாசிக்க, அருகில் இருந்தோர் அதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனால் உற்சாகமடைந்த இசைக்குழுவினர், தொடர்ந்து வாசிப்பால் அங்கிருக்கும் மக்களை கிறங்கடிக்க செய்தனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக நேற்று சென்னை வந்திறங்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்கள் மம்தா மற்றும் ஸ்டாலின் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்றும், அரசியல் குறித்து ஏதும் பேசவில்லை என்றனர்.
அப்போது செய்தியார்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,"முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக கவர்னர் விடுத்த அழைப்புக்காகச் சென்னை வந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலினைப் பார்க்காமல் நான் எப்படி சென்னையிலிருந்து செல்லமுடியும். இரண்டு அரசியல் தலைவர்களும் சேர்ந்து அரசியலைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றியும் பேசலாம், நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலைவிட வளர்ச்சி முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.