ரயில் நிலையத்தில்.. துடிதுடித்து உயிரிழந்த பெண்ணின் தந்தையும் மரணம் .. சென்னையை உலுக்கிய சோகம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 14, 2022 11:07 AM

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சதீஷ். அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் சத்யா என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.

chennai youth push woman in front of train police arrested him

Also Read | அப்பா, அம்மாவை பாத்துக்க முடியலைன்னா அவங்க கொடுத்த சொத்து எதுக்கு?.. முதியோர் இல்லத்தில் தவித்த பெற்றோர்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

கல்லூரி மாணவியான சத்யாவும், சதீஷும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை உருவாக ஆரம்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் சதீஷிடம் இருந்த விலகவும் சத்யா முடிவு செய்த நிலையிலும் எப்போதும் அவரை பின் தொடர்ந்து சதீஷ் வந்ததாகவும் கூறப்படுகிறது.

chennai youth push woman in front of train police arrested him

இந்த நிலையில், நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா வந்துள்ளார். அப்போதும் வழக்கம் போல சத்யாவிடம் சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அந்த சமயத்தில் மின்சார ரயில் ஒன்றும் வந்ததாக கூறப்படுகிறது.

chennai youth push woman in front of train police arrested him

அப்படி ஒரு சூழ்நிலையில், ரயிலில் சிக்கிய சத்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேரில் பார்த்தவர்கள் சிலர் குறிப்பிட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் அப்பெண்ணை தள்ளிவிட்டதாக கூறப்பட்டதை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை போலீசார் விசாரித்து வருவதாக தெரிகிறது. மாணவி சத்யாவின் உடலை மீட்ட போலீசார், இது பற்றி விசாரித்தும் வருகின்றனர்.

மாணவி சத்யாவின் மரணம் அவரது குடும்பத்தினரை கடும் துயரத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில், மற்றொரு துயர சம்பவமும் அவர்களின் குடும்பத்தில் அரங்கேறி உள்ளது. மகள் சத்யா மறைவால் சோகத்தில் இருந்து வந்த அவரது தந்தை யும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

chennai youth push woman in front of train police arrested him

மகள் பிரிந்து சென்றதையடுத்து துயரத்தில் இருந்த தந்தையும் உயிரிழந்த நிகழ்வு, அவரது குடும்பத்தினரை மீளாத துயரில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | படிக்கலைன்னு திட்டிய அப்பா.. வீட்டைவிட்டு ஓடிப்போன மகன்.. ஒன்றரை வருஷம் கழிச்சு நடந்த அதிசயம்.. வாழ்க்கையை மாற்றிய ஆதார்கார்டு..!

Tags : #POLICE #TRAIN #CHENNAI #YOUTH #WOMAN #ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai youth push woman in front of train police arrested him | Tamil Nadu News.