30 நாளுல 36 லட்சம்.. "கல்யாணம் பண்ண போறவரு தானேன்னு" நம்புன பெண்.. கதி கலங்க வெச்ச 'VOICE' மெசேஜ்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த முடிச்சூரில் வசித்து வருபவர் 35 வயது பெண். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Also Read | இந்தியா டீம் Whatsapp குரூப் மூலமா இளம் வீரருக்கு தெரிஞ்ச விஷயம்.. பல நாள் உழைப்புக்கு கெடச்ச அதிர்ஷ்டம்!!
இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்லைன் வெப்சைட் மூலம் தனக்கு வரன் பார்க்கவும் அந்த பெண் தொடங்கி உள்ளார். அப்போது, ஹபீப் ரஹ்மான் என்ற நபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தனது மனைவி இறந்து விட்டதாகவும், சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு வருவதாகவும் ஹபீப் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஒரு அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர் இருப்பதாகவும், அவர்கள் இருவரும் வெவ்வேறு வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் ஹபீப் கூறி உள்ளார். இதன் பின்னர், அந்த பெண்ணுக்கு ஹபீபை பிடித்து போகவே திருமணம் செய்யவும் விரும்பி உள்ளார்.
தனது அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர், வெளிநாட்டில் இருந்து வந்த பின்னர் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என ஹபீப் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சில நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் இரண்டு நாட்களில் தந்து விடுவதாகவும் கூறி கூகுள் பிளே மூலமாக அந்த பெண்ணிடம் இருந்து ஹபீப் பணம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஹபீப், தனது நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அதை முடித்து வைக்க 10 லட்சம் தேவைப்படுவதாகவும் நிலம் கைக்கு வந்தால் கோடிக்கணக்கில் விற்பனை செய்து வாழ்க்கையில் இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் வருங்கால கணவர் என்று தானே என்று நினைத்து அந்த பெண்ணும் 10 லட்சத்தை கையில் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இப்படி 30 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 36 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 13 சவரன் தங்க நகையை அந்த பெண்ணிடம் இருந்து ஹபீப் வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், ஹபீப் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கடும் பீதியை அந்த பெண்ணுக்கு ஏற்படுத்தி உள்ளது.
பணம் கொடுத்ததற்கு நன்றி, பாய் என குறிப்பிட்டு ஹபீப் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அந்த பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் நிலையில், செல்போனை அவர் ஸ்விட்ச் ஆப்பும் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக, அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க, ஹபீபை தீவிரமாகவும் போலீசார் தேடி வந்துள்ளனர். பூந்தமல்லி பகுதியில் மனைவியுடன் ஹபீப் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கே சென்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகி மனைவிகளுடன் ஹபீப் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், வரம் தேடும் ஆன்லைன் வெப்சைட் மூலம் தொலைபேசி எண்ணை எடுத்து அவரிடம் திருமண ஆசை கூறி, இப்படி நூதன முறையில் பணம் மோசடி செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், இதில் கிடைக்கும் பணம் மூலம் சொகுசு வாழ்க்கையையும் ஹபீப் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read | ஷு-க்குள்ள கேட்ட சத்தம்.. வீட்டை க்ளீன் பண்ணப்போ தெரிய வந்த உண்மை.. ஆடிப் போன பெற்றோர்கள்!