மோதிரம் மாற்றி திருமணம்.. ரகசியம் காத்த இருநாட்டு அழகிகள்.. "வீடியோ ஷேர் பண்ணி சீக்ரெட்ஸ் உடைச்சுட்டாங்க"
முகப்பு > செய்திகள் > உலகம்அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் மரியானா வரேலா (Mariana Varela). முன்னாள் அர்ஜென்டினா அழகியான இவர், பிற நாடுகளில் நடைபெறும் அழகி போட்டிகளிலும் பங்கேற்று வந்ததாக தெரிகிறது.
![miss argentina and miss puerto rico reveal they are married miss argentina and miss puerto rico reveal they are married](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/miss-argentina-and-miss-puerto-rico-reveal-they-are-married.jpg)
Also Read | "ராணி மாதிரி இருக்குற மனைவிய.. மகாராணி மாதிரி பாத்துப்பேன்".. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை
மரியானாவை போலவே, பியூர்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்தவர் ஃபாபியோலா வேலண்டினா. இவரும் மிஸ் பியூர்டோ ரிகோ பட்டம் வென்றுள்ள நிலையில், அழகி போட்டிகளில் கலந்து கொண்டும் வந்துள்ளார்.
அப்படி இருக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில், அர்ஜென்டினா நாட்டின் சார்பாக மரியானா வரேலாவும், பியூர்டோ ரிக்கோ நாட்டின் சார்பாக வேலண்டினா ஆகியோரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில் ஒருவரை ஒருவர் அறிமுகமாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் நல்ல தோழிகளாகவும் மாறி உள்ளார்கள். நாட்கள் செல்ல செல்ல, இவர்கள் இடையே இன்னும் அதிக அன்பும் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் அதிகம் விரும்ப தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரியானா மற்றும் ஃபாபியோலா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர்கள் ஒன்றாக பல இடங்களில் சுற்றித் திரியும் வீடியோக்கள் மற்றும் சமீபத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இரு நாட்டு அழகிகள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை தற்போது அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளனர். முன்னதாக, இவர்கள் தங்கள் உறவு பற்றிய செய்தியை ரகசியமாக வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் அழகிகள் இரண்டு பேரும் தங்களின் புது வாழ்வை தொடங்கி உள்ளதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | இறப்பதற்கு முன் மலை உச்சியில் செல்ஃபி எடுத்த மனைவி.. கைதான கணவர்.. என்ன நடந்தது.? உறைய வைக்கும் பின்னணி!!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)