வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்த மனைவி.. நடுராத்திரி கேட்ட அலறல் சத்தம்.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Oct 12, 2022 02:41 PM

சென்னையில் வேறு ஒரு ஆணுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த மனைவியை அவரது கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைமறைவான கணவரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

The husband hits wife after she posted a video with another man

Also Read | பழைய சுவத்துக்குள்ள புதைக்கப்பட்ட பர்ஸ்.. உள்ளே இருந்த ரகசிய கடிதம்.. 62 வருஷத்துக்கு அப்பறம் வெளிவந்த ஆச்சர்யம்..!

ரீல்ஸ்

சென்னை, அயனாவரம் என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இவரது மனைவி பிரபல சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கி வருபவர் என சொல்லப்படுகிறது. மேலும், திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் சாலமனின் மனைவி. இதன்மூலம் பலர் அவரை இன்ஸ்டா மூலமாக பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர். இருப்பினும், இதில் சாலமனுக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது.

எச்சரிக்கை

இந்நிலையில், சமீபத்தில் வேறு ஒரு ஆணுடன் ரீல்ஸ் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பெண். இதனை கண்ட சாலமன் கோபமடைந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் எச்சரிக்கையும் செய்திருக்கிறார். ஆனால், அவரது மனைவி தொடர்ந்து வேறு ஒரு நபருடன் இணைந்து ரீல்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

The husband hits wife after she posted a video with another man

இதனிடையே நேற்று இரவு வீட்டுக்குட் திரும்பிய சாலமன், தனது மனைவிடம் இந்த ரீல்ஸ் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் ஆத்திர மிகுதியால் சாலமன் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவரது மனைவி சத்தம் எழுப்பவே பதறியடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

வழக்கு பதிவு

காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த அயனாவரம் காவல் நிலைய அதிகாரிகள் சாலமன் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "லீவ் மட்டும் விடுங்க.. உங்களுக்கு கோவில் கட்டுறேன்".. மாணவர்கள் வச்ச கோரிக்கை .. வைரலாகும் கலெக்டரின் பதிவு..!

Tags : #HUSBAND #WIFE #CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The husband hits wife after she posted a video with another man | Tamil Nadu News.