200 வருசத்துல முதல் முறை.. மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் முன் ஜோராக நடந்த திருமணம்!!..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 28, 2022 12:37 PM

சென்னை அரசின் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இதுவரை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தும் சென்றுள்ளனர்.

Chennai kilpauk institute of mental health inmates got married

Also Read | உலகின் அதிவேக வெர்டிகல் ரோலர் கோஸ்டர்.. கின்னஸ் சாதனை படைத்த துபாய்.. அதிரவைக்கும் வீடியோ..!

அப்படி ஒரு சூழ்நிலையில், மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற வந்த இரண்டு பேர் இடையே காதல் உருவாகி, திருமணமும் நடந்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மனநல சிகிச்சைக்காக வெவ்வேறு இடங்களில் இருந்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் வந்த இரண்டு பேர் அதன் மூலம் தங்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தையயும் தொடங்கி உள்ளனர். சென்னையை சேர்ந்த 42 வயது மகேந்திரன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக Affective Disorder ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வந்துள்ளார்.

Chennai kilpauk institute of mental health inmates got married

மகேந்திரனை போலவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் பகுதியை சேர்ந்த 36 வயதான தீபாவும் மனநல காப்பகத்தில்  வந்து சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உள்நோயாளியாக மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் மற்றும் தீபா ஆகியோர், மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சை காரணமாக குணமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர், காப்பகத்தில் உள்ள Care Centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளிலும் மகேந்திரன் மற்றும் தீபா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai kilpauk institute of mental health inmates got married

முன்னதாக தீபா மீது ஆரம்பத்திலேயே மகேந்திரனுக்கு காதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. தந்தையை இழந்து மனவேதனையில் இருந்த தீபாவுக்கு உற்ற துணையாக இருந்துள்ளார் மகேந்திரன். பல நாட்களுக்கு பிறகு, தீபாவும் மகேந்திரன் காதலை ஏற்றுக் கொள்ள, ஆரம்பத்தில் இவரது காதலுக்கு மனநல காப்பகம் தடை விதித்தாகவும் கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் முழுமையாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த பிறகு அவர்களது திருமணமும் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று (28.10.2022) நடைபெற்றுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் மகேந்திரன் - தீபா திருமணம் நடந்தது.

Chennai kilpauk institute of mental health inmates got married

மனநல காப்பகத்தில் இருந்து காதல் வசப்பட் இருவர், அதிலிருந்து முழுமையாக குணமடைந்து தற்போது திருமணமும் செய்துள்ள நிலையில் இந்த ஜோடிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ட்விட்டரை கைப்பற்றினாரா எலான் மஸ்க்..? முதல் வேலையா இந்தியரான ட்விட்டர் CEO நீக்கமா.? பரபரப்பு தகவல்கள்..!

Tags : #CHENNAI #KILPAUK #INSTITUTE OF MENTAL HEALTH #MARRIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai kilpauk institute of mental health inmates got married | Tamil Nadu News.