ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?.. பெருங்களத்தூர தாண்டல ஜானு .. சென்னை டிராஃபிக்கில் தீபாவளி வெளியூர் பயணம்.. பறக்கும் மீம்ஸ்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இதனை கண்டெட்டாக எடுத்து கலக்கி வருகிறார்கள் மீம் கிரியேட்டர்ஸ்.

நாளை (அக்டோபர் 24 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆடைகள் வாங்குவது, பட்டாசு விற்பனை என தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுவாக, தீபாவளியன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் பலவித உணவுகளை சமைத்து உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.
முக்கியமாக பட்டாசுகள். வண்ண வண்ண பட்டாசுகளை வாங்கி வெடிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்பவர்களுக்கு வரும் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
முதலில் பேருந்துகளில் இடம் கிடைப்பது ரொம்பவே சிரமமான காரியம். தீபாவளிக்கு முந்தைய நாட்களில் மனித தலையா கடல் அலையா என தெரியாத அளவுக்கு பேருந்து நிலையங்களில் கூட்டம் ததும்பி நிற்கும்.
அப்படியும், சிக்கி திக்கி இடம் கிடைத்துவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு எல்லாம் சொந்த ஊருக்கு போய்விட முடியாது. "குறுக்க இந்த கவுசிக் வந்தா" எனும் படி உங்களது பொறுமையை சோதிக்கவே பெருங்களத்தூர் உங்களை வரவேற்கும்.
இப்படி ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ளும் பயணிகளின் அனுபவத்தை மீம்சாக இறக்கி வருகிறார்கள் பலே கிரியேட்டர்கள். "ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்.. இன்னும் பெருங்களத்தூரையே தாண்டல ஜானு" என பார்த்த உடன் வெடித்துச் சிரிக்க வைக்கும் தரமான மீம்களால் நிரம்பி வழிகிறது சோசியல் மீடியாக்கள்.
பேருந்தில் சோகத்துடன் பல மணிநேரம் உட்காந்திருப்பவர்கள் கூட இந்த மீம்களை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
