மேகம் கருக்குது.. கொட்டித் தீர்த்த மழை.. குஷியாக கொண்டாடிய போதை ஆசாமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மழைநீரில் மது அருந்திய நபர் ஒருவர் படுத்துக்கொண்டு எஞ்ஜாய் செய்யும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் நவம்பர் 5 ஆம் தேதிவரையில் கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டும் அல்லாது காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தலைநகரான சென்னையில் நேற்று முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பாய்ந்தோடுகிறது. எழும்பூர், வேப்பேரி, பெரிமேடு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்தது. அதேபோல புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்துவாங்கியது. இந்நிலையில், தங்களது பகுதிகளில் மழை நிலவரம் குறித்து மக்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றுள் மது அருந்திய நபர் மழை நீரில் படுத்தபடி மழையை கொண்டாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. அந்த வீடியோவில் ஒருவர் பாய்ந்தோடும் மழை நீரில் படுத்துக்கொண்டும், அதன் வழியே செல்லும் மக்களிடம் பேசிக்கொண்டும் உள்ளார். மேலும், தண்ணீரை அவர் குடித்தும், பின்பக்கமாக டைவ் அடித்தும் எஞ்ஜாய் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
TASMAC Influence + Chennai Rain. What a real combination to depict the actual scenario ! #chennairains #Chennairain
— G Pradeep (@pradeep_gee) November 1, 2022