இன்னும் 3 நாள்ல சிங்கார சென்னை 2.0 திட்டம்.. மழைநீர் வடிகால் பணிகள் பற்றி மேயர் பிரியா சொல்லிய சூப்பர் தகவல்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்திருக்கிறார்.

Also Read | சிவன் வேடமிட்டு நடித்த நபர்.. மேடையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க துணை தூதரகத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இரண்டு மாத காலம் நடைபெற்ற இந்த பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மேயர் பிரியா, முதன்மை செயலாளர் திரு ககன்தீப் சிங்பேடி மற்றும் துணை மேயர் திரு மு.மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி
நிகழ்ச்சி முடிந்து பேசிய மேயர் பிரியா,"தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகளும் இருக்கவேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஆங்கில திறனை மேம்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அமெரிக்க துணை தூதரகத்தின் மூலம் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் பேசும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
மழைநீர் வடிகால்
தொடர்ந்து சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து பேசிய அவர்,"சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரையில் பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 95 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ளன. இதற்காக மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. சிந்தாதிரி பேட்டையில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் வகையில் உணவுக்கூட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
Also Read | அரசு பள்ளிகளில் திரையிடப்படும் "தி ரெட் பலூன்" படம்... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.. முழுவிபரம்..!

மற்ற செய்திகள்
