“செம்ம EDIT".. பரபரக்க வைத்த இந்தியா-வங்கதேச மேட்ச்.. இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த வீடியோ.. பக்காவா பொருந்துதே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Nov 03, 2022 01:05 PM

நேற்று நடைபெற்ற வங்கதேச அணியுடனான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Director Venkat Prabhu shares video of Ind vs Bangladesh match

Also Read | விராட் கோலி வெச்ச அப்பீல்.. அடுத்த கணமே அவருகிட்ட ஓடி வந்த ஷகிப்.. பரபரப்பு நிமிடங்கள்!!

T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி நேற்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. இதில் விராட் கோலி ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். முதல் மூன்று போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத ராகுல் இந்த போட்டியில் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

Director Venkat Prabhu shares video of Ind vs. Bangladesh match

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி 16 ஓவர்களாகவும் டார்கெட் 151 ஆகவும் மாற்றப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் (DLS முறைப்படி) 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Director Venkat Prabhu shares video of Ind vs. Bangladesh match

இந்நிலையில், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நேற்று நடைபெற்ற இந்தியா - வங்கதேச போட்டியின் பின்னணியில் சென்னை 600028-II ஆடியோ இடம்பெற்றிருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ஜெய், வைபவ், சிவா, பிரேம்ஜி, இளவரசு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெறும் மேட்சில் மழை குறுக்கீடு செய்தாலும் இறுதியில் ஜெய்-கூட்டணி வெற்றிபெறும்.

நேற்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டு, அதன்பின்னர் மீண்டு வந்த இந்தியா போட்டியை த்ரில்லாக வென்றது. இதனை சென்னை 600028-II படத்துடன் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் வீடியோவாக பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவில்,"வாவ். செம்ம எடிட்" எனக் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "ராணி மாதிரி இருக்குற மனைவிய.. மகாராணி மாதிரி பாத்துப்பேன்".. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை

Tags : #CRICKET #VENKAT PRABHU #DIRECTOR VENKAT PRABHU #IND VS BAN #T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Director Venkat Prabhu shares video of Ind vs Bangladesh match | Sports News.