‘எளிதில் ஹேக் செய்யப்படும் ஆபத்தில் வாட்ஸ்அப்’.. ‘பாதுகாத்துக்கொள்வது எப்படி?’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Saranya | Nov 18, 2019 04:20 PM
வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்கள் எம்பி4 வகை வீடியோக்களை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்கள் உளவு பார்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது வாட்ஸ்அப் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. வாட்ஸ்அப்பிற்கு எம்பி4 வகை வீடியோவை அனுப்புவதன் மூலம் ஹேக்கர்கள் பயனாளர்களின் தகவல்களைத் திருட முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இதன்மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் மட்டுமின்றி செல்ஃபோனில் உள்ள தகவலகளும் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதலை எப்படி கண்டறிவது என்ற விவரத்தை வெளியிடாத ஃபேஸ்புக் நிறுவனம், இதிலிருந்து தற்காலிகமாக தற்காத்துக்கொள்ள பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.