‘அவரோட ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணம்..’ விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 03, 2019 06:33 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு ஓய்வு பெறுவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gautam Gambhir blasts Indian selectors for Rayudus Retirement

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடுவின் முடிவுக்கு இந்திய அணியின் தேர்வுக்குழுவினரே காரணம் என பாஜக எம்.பி.யும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றிப் பேசியுள்ள அவர், “அம்பதி ராயுடு இளம் வயதிலேயே ஓய்வை அறிவிக்க எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர்தான் காரணம். தேர்வுக்குழுவில் உள்ள 5 உறுப்பினர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அடித்த மொத்த ரன்களையும் சேர்த்தாலும் அம்பதி ராயுடு அடித்துள்ள ரன்களை ஈடு செய்ய முடியாது.

அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தவர். தேசத்துக்காகவும் இந்திய அணியில் இடம் பெற்று 3 சதங்கள், 10 அரைசதங்கள் அடித்துள்ளார். இதுபோன்ற இளம்வீரர் ஓய்வு பெறுவது இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான தருணம்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #AMBATIRAYUDU #GAUTAMGAMBHIR