ஸ்கூல் வேனின் சக்கரத்தில் சிக்கி 1ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு..! தாய் கண்முன்னே நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 01, 2019 09:26 PM

ஸ்கூல் வேனில் இருந்து இறங்கும் போது எதிர்பாரத விதமாக வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 year old boy died by careless mistake of school van driver

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுமதுரை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல். இவர் தன்னுடைய 6 வயது மகன் முகுந்தனை திருவெண்ணைநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 3 என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் திருவெண்ணைநல்லூரில் உள்ள தனியார் பள்ளி இன்றே திறக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிக்கு முதல் நாள் என்பதால் முகுந்தனை அவனது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து பள்ளி முடிந்து மாலை ஸ்கூல் வேனில் முகுந்தன் வீடு வந்துள்ளார். அப்போது வேனில் இருந்து இறங்கும் போது வேனின் படிக்கட்டில் இருந்த கம்பி ஒன்று முகுந்தனின் பேக்கில் மாட்டிக் கொண்டுள்ளது. இதனைக் கவணிக்காத டிரைவர் வேனை உடனே எடுத்ததும் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் முகுந்தனின் மீது வேனின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதனையறிந்த வேன் டிரைவர் உடனே அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பள்ளி சென்றுவிட்டு வரும் மகனை அழைத்து செல்ல காத்திருந்த தாயின் கண்முன்னே குழந்தை துடிதுடிக்க இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VILLUPURAM #SCHOOL #STUDENT