பின்னால தோனி இருக்கும் போது இத பண்ணா இப்டிதான் நடக்கும்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 03, 2019 10:01 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதும் 15 -வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.

WATCH: MS Dhoni take a brilliant catch

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளுக்கு 75 ரன்கள் அடித்து தோனி அசத்தினார். அதில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தோனியின் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் இன்று(03.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இதில் டி காக் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் 13 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.

Tags : #IPL2019 #IPL #MSDHONI #CSKVSMI #WHISTLEPODUARMY #YELLOVEAGAIN #VIRALVIDEO