பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா விஜயகாந்த்? என்ன சொல்கிறார்கள் டாக்டர்கள்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Apr 03, 2019 10:17 PM

 

wheather vijayakanth health is fit to start the election campaign

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு இருந்ததால், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ள.விஜய்காந்த் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். மேலும், வாரத்துக்கு 2 முறை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தேவையான பரிசோதனைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளரு மான பிரேமலதா, ‘‘விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் விரைவில் தேர்தல் பிரச்சாரம் செய்வார்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறியதாவது, ‘‘விஜயகாந்துக்கு ஓய்வு மிகவும் முக்கியம். தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்கெல்லாம் அவரது உடல்நிலை ஒத்துழைக்காது” என்று கூறியுள்ளனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #VIJAYAKANTH #DMDK #ELECTION CAMPAIGN