அட போங்க வருமான வரித்துறை கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்க! துரைமுருகன் புது விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Apr 02, 2019 08:29 PM

 

duraimurugan gives fitting reply about IT raid in his house and office

திமுக பொருளாளா் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்த் நிர்வாகித்து வரும் பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும் துரைமுருகனுக்கு நெருக்கமானவா்களின் வீடுகளிலும் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக துரைமுருகன் கூறுகையில், இந்த வருமான வரித்துறையினரின் சோதனைக்கு ஒரே காரணம் அரசியல் உள்நோக்கம் தான். வருமான வரி சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தோ்தல் பணிகளை முடக்கி வைத்துவிட்டனா். அதிமுக, பாஜக கூட்டணிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டதால் சோதனை என்ற பெயரில் என்னை அடித்தால் நானோ, திமுகவினரோ அஞ்சிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டுள்ளனா்.

மேலும், வருமான வரித்துறையினா் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடா்பும் கிடையாது. திமுகவின் வெற்றியை எவ்வாறு தடுக்கலாம் என திட்டமிட்டே என் வீடு, திருச்செந்தூா் அனிதா ராதாகிஷ்ணன் வீடு போன்ற இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசியல் அறிவு இல்லாதவா்களின் இதுபோன்ற செயல்களால் நாங்கள் இப்போது தான் மிகவும் வலிமையாக இருக்கிறோம். வெற்றி பெற முடியாதவா்களால் போடப்பட்ட தப்பு கணக்கு.

இந்நிலையில், இந்த தொடா் சோதனைகளால்  எங்கள் தோ்தல் பிரசாரத்தை மட்டுமே தடுக்க முடியுமே தவிர எங்களது வெற்றியை தடுக்க முடியாது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #DMK #DURAIMURUGAN